" தொண்டர் நாள்தொறும் துதிசெயவருள்செய் கேதீச்சரத்தானே "

ஈழத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் , மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துளதே திருக்கேதீஸ்வரமாகும். நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள்.

கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதீஸ்வரமாக வந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரபத்மனின் மனையாளின் பேரனார் துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். அவர் துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் , காலப் போக்கில் அவர் முயற்சியால் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தது.

ஒரு ஆலயத்திற்கு மூர்த்தி மட்டுமல்ல, தலம், தீர்த்தம், விருட்சம் என்பனவும், முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். திருக்கேதீஸ்வர திருத்தலமானது இயற்கை வனப்பு நிறைந்தது. மாஞ்சோலைகள், தென்னந்தோப்பு என்பன வற்றுடன், இயற்கையாக பெறுமதிமிக்க சங்கும், முத்தும் விளைகின்ற கடற் கரையில் ஆலயம் அமைந்திருப்பதுடன், இங்கு மயிலாடுவதும், மான்கன்று துள்ளி விளையாடுவதும், வண்டுகள் ரீங்காரம் செய்வதுமான புனித இடமாகவும் இருக்கிறது. திருக்கேதீஸ்வரத்தின் தீர்த்தம் பாலாவியாகும். இந்தியாவில் ஒடுகின்ற புனிதமான கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி போன்ற சப்த நதிகளின் மகிமையை ஒன்றாகக் கொண்டிரு ப்பதுடன், இங்கு தீர்த்த மாடுவோர்க்கு பாவங்க ளையும், தீயவினைகளை யும் போக்குவதும் பாலா வியின் மகிமையாகும்.

சிவ விரதங்களில் கேதார கெளரி விரதம், திருவாதிரை விரதம், பிர தோஷ விரதம், சிவராத்திரி விரதம் என்பன மகிமை வாய்ந்தவையாகும். சிவராத்திரி தினத்திலே ஒருநாள் முழுவதையும் சிவசிந்தனையோடு போக்குவதும், சிவவழிபாடு செய்வதும், உபவாசம் இருப்பதும் விரத நியதியாகும். இத்தகு விரத நியதியைக் கடைப்பிடிக்கக்கூடிய வகையில் நின்றாலும், இருந்தாலும், நடந்தாலும் இமைக்கின்ற போதிலும், ஈஸ்வரப் பெருமானுடைய சிந்தனையில் இருப்பதற்கு திருக்கேதீஸ்வரம் மகிமை வாய்ந்த தலமாகும்

Latest News
  • உலகில் பல நாடுகளிலும் மிக கொடூரமான முறையில் பரவி வரும் கொரோனா தொற்று நோய் தணிந்து மக்கள் அனைவரும் நல் வாழ்வு வாழ வேண்டி சிவபூமி மன்னார் மாதோட்ட திருக்கேதீச்சர பேராலயத்தில் சர்வாரி வருடம் சித்திரை திங்கள் 18 ம் நாள் வெள்ளிக்கிழமை இன்று பகல் 10:30 மணிக்கு 01-05-2020 மிருத்திஞ்சய ஹோமம் இடம்பெற்றது அதனைத்தொடர்ந்து கேதீச்சரநாதருக்கும் அம்பாளுக்கும் விசேச அபிஷேகம் நடைபெற்றது இனிவரும் நாட்களை கீழே குறிப்பிடப்படும் முக்கிய பூசைகள் இடம்பெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது 08-05-2020 ருத்திர ஹோமம் 15-05-2020 சத்துரு சம்கார ஸ்கந்த ஹோமம் 22-05-2020 சுதர்சன விஷ்ணு ஹோமம் 29-05-2020 லக்ஸ்மி ஹோமம் இறுதியாக 05-06-2020 நவக்கிரக ஹோமத்துடன் நோய் நிவர்த்தி விசேச பிரார்த்தனை நிறைவு பெறவுள்ளது

Renovation & Restoration of 24 surrounding temples with Granite

“Realizing the centuries of dream” Thiru ketheeswaram Temple Restoration Society has come forward to Renovation & Restoration of 24 surrounding temples with Granite and carving, As such we humbly appeal to donate to contribute towards the construction. We all blessed with and ones in life time opportunity to do the restoration work of the 2400 years temple..

We will be very much pleased if you’re good self-donate fantastically and fabulously in whatever the possible way to fulfill successfully this thirupani work of construction.

THIRUKETHEESWARM TEMPLE RESTORATION SOCIETY